ADDED : ஜூலை 02, 2025 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்நல்லுார் அருகே, ராமதேவன் கிராமம் செட்டிபாளையத்தை சேர்ந்த முஸ்தகீம், 37. இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். கடந்த, 12ம் தேதி இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவில் இருந்த பணம் திருட்டு போனது தெரிய வந்தது.
இந்நிலையில், நேற்று மணியனூர் சாலை பிரிவில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், நின்று கொண்டிருந்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை சேர்ந்த கோவிந்தசாமி மகன் வேலன், 32, என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில் மளிகை கடையில் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, நல்லுார் போலீசார் வேலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.