/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கஞ்சமலை அடிவாரத்தில் சிவகுடும்ப சிலை கோடிலிங்கேஸ்வரர் கோவில் கட்ட பூமிபூஜை
/
கஞ்சமலை அடிவாரத்தில் சிவகுடும்ப சிலை கோடிலிங்கேஸ்வரர் கோவில் கட்ட பூமிபூஜை
கஞ்சமலை அடிவாரத்தில் சிவகுடும்ப சிலை கோடிலிங்கேஸ்வரர் கோவில் கட்ட பூமிபூஜை
கஞ்சமலை அடிவாரத்தில் சிவகுடும்ப சிலை கோடிலிங்கேஸ்வரர் கோவில் கட்ட பூமிபூஜை
ADDED : பிப் 04, 2025 06:41 AM
இளம்பிள்ளை: கஞ்சமலை அடிவாரத்தில், 54 அடியில் பிரம்மாண்ட சிவகுடும்ப சுதை சிலையுடன் கோடிலிங்கேஸ்வரி உடனுறை கோடிலிங்-கேஸ்வரர் கோவில் கட்டும் திருப்பணி பூமி பூஜையுடன் நேற்று துவங்கியது. சேலத்தில், நவகோடி சித்தர்கள் தொண்டு அறக்கட்-டளை என்ற தன்னார்வ அமைப்பு, பல்வேறு கோவில்
திருப்பணி-களுக்கான உதவிகள், ஆன்மிகம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அறக்கட்டளை
சார்பில், இளம்பிள்ளை அருகே கஞ்சமலை அடிவாரம் முருங்கப்பட்டி சித்தர்காடு பெத்தம்பட்டி கிராமத்தில், 54
அடியில் பிரம்மாண்டமான சிவன், பார்வதி, கண-பதி, முருகன் அனைவரும் குடும்ப சகிதமாக காட்சியளிக்கும்
சுதை சிற்பத்துடன், கோடிலிங்கேஸ்வரி உடனுறை கோடிலிங்-கேஸ்வரர் கோவில் கட்டும் திருப்பணிகள் நேற்று
காலை, 6:30 மணிக்கு பூமி பூஜையுடன் துவங்கியது. சிவ புராண பாராயணம், சிவனடியார்களின் ஆன்மிக
சொற்பொழிவு நடந்தது.இதுகுறித்து அறக்கட்டளை நிறுவனர் சித்தரசு, 48, கூறுகையில், ''எண்ணற்ற சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வரும்
சித்தர்மலை என்ற கஞ்சமலை அடிவாரத்தில், எங்களுக்கு சொந்தமான, 3 ஏக்கர் நிலத்தில் உலகிலேயே பெரிய
பிரம்மாண்டமான சிவகு-டும்பம், சிமென்ட் கலவையால் ஆன சுதை சிற்பம் அமைக்கப்ப-டவுள்ளது.இத்துடன் கருங்கற்களால், கோடிலிங்கேஸ்வரி உடனுறை கோடி-லிங்கேஸ்வரர் கோவில், 2 கோடி ரூபாய்
மதிப்பில் நான்கு ஆண்-டுகளில் கட்டி முடித்து கும்பாபிேஷகம் செய்ய திட்டமிட்டு பூமி பூஜை செய்துள்ளோம்,''
என்றார்.

