/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
15ல் குரூப்-1 தேர்வு: மாவட்டத்தில் தேர்வெழுத 6,079 தேர்வர்கள் தயார்
/
15ல் குரூப்-1 தேர்வு: மாவட்டத்தில் தேர்வெழுத 6,079 தேர்வர்கள் தயார்
15ல் குரூப்-1 தேர்வு: மாவட்டத்தில் தேர்வெழுத 6,079 தேர்வர்கள் தயார்
15ல் குரூப்-1 தேர்வு: மாவட்டத்தில் தேர்வெழுத 6,079 தேர்வர்கள் தயார்
ADDED : ஜூன் 12, 2025 01:36 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், வரும், 15ல், 24 மையங்களில் நடக்கும், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வை, 6,079 பேர் எழுதுகின்றனர்.
டி.என்.பி.எஸ்.சி., மூலம் குரூப்-1, 1ஏ பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு, வரும், 15ல், தமிழகம் முழுவதும் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில், பாச்சல் ஞானமணி கல்லுாரி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுச்சத்திரம் ஆர்.ஜி.ஆர்., மெட்ரிக்பள்ளி, செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் விநாயகா மெட்ரிக் பள்ளி, நாமக்கல் ஜெய்விகாஸ் மேல் நிலைப்பள்ளி.
செல்லப்பம்பட்டி சக்தி மெட்ரிக் பள்ளி, நாமக்கல் வடக்கு அரசு மேல் நிலைப்பள்ளி, நாமக்கல் செல்வம் கல்லுாரி, எர்ணாபுரம் சி.எம்.எஸ்., கல்லுாரி, பாவை பொறியியல் கல்லுாரி, நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லுாரி, குறிஞ்சி மெட்ரிக் பள்ளி, ஸ்பெக்ட்ரம் அகாடமி, வேட்டாம்பாடி பி.ஜி.பி., பள்ளி, நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி உள்ளிட்ட, 24 மையங்களில் தேர்வு நடக்கிறது.
மாவட்டம் முழுவதும் மொத்தம், 6,079 தேர்வகள் பங்கேற்கின்றனர். தேர்வு பணியில், 24 பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
காலை, 9:30 முதல், மதியம், 12:30 மணி வரை நடக்கிறது. முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.