ADDED : மார் 16, 2026 07:37 AM
நாமக்கல்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒத்திவைக்கப்பட்ட, ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வான குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான முதன்மை தேர்வானது, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் அடுத்த வேட்டாம்பாடி பி.ஜி.பி., இன்டர்நேஷனல் பள்ளியில், இத்தேர்வு நடந்தது. காலை, 9:30 முதல், மதியம், 12:30 வரையும், மதியம், 2:30 முதல், மாலை, 5:30 மணி வரை என, இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இத்தேர்வில், காலையில், 283 தேர்வர்கள், மாலையில், 298 தேர்வர்கள் என, மொத்தம், 581 பேர் விண்ணப்பித்திருந்தனர். காலையில், 8:30 மணிக்கு மேலும், மதியம், 1:30 மணிக்கு மேலும் வந்தவர்களை, தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கவில்லை.
காலையில் நடந்த தேர்வில், 169 பேர் பங்கேற்றனர். 14 பேர் கலந்து கொள்ளவில்லை. இதேபோல், மாலையில் நடந்த தேர்வில், 280 பேர் கலந்து கொண்டனர். 18 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை. மொத்தமாக, நேற்று நடந்த குரூப் 2, 2ஏ தேர்வை, 449 பேர் எழுதினர். 32 பேர் பங்கேற்கவில்லை.
