/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குண்டுமல்லி கிலோ ரூ.300க்கு விற்பனை
/
குண்டுமல்லி கிலோ ரூ.300க்கு விற்பனை
ADDED : ஜூலை 13, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அடுத்துள்ள எருமப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள பொட்டிரெட்டிபட்டி, அலங்காநத்தம், நவலடிபட்டி, பழையபாளையம், முத்துகாபட்டி மற்றும் பவித்திரம் பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் குண்டுமல்லி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
கூலியாட்கள் மூலம் தினந்தோறும் பறிக்கும் பூக்களை, நாமக்கல், கரூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் நடக்கும் தினசரி பூ சந்தைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
கடந்த வாரம், 260 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ குண்டுமல்லி, தற்போது, 300 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.