/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குண்டுமல்லிக்கு 15 நாளாக 'மவுசு'
/
குண்டுமல்லிக்கு 15 நாளாக 'மவுசு'
ADDED : நவ 21, 2024 01:23 AM
குண்டுமல்லிக்கு
15 நாளாக 'மவுசு'
எருமப்பட்டி, நவ. 21-
எருமப்பட்டி யூனியனில் அலங்காநத்தம், கஸ்துாரிப்பட்டி, நவலடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தினந்தோறும் பறிக்கும் பூக்களை, நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டில் தினசரி நடக்கும் ஏலத்திற்கு அனுப்பி வருகின்றனர். சில நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், குண்டுமல்லி வரத்து வெகுவாக குறைந்தது. இதனால், 1,000 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த, 7ல் முகூர்த்த நாளன்று, குண்டுமல்லி பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து, 15 நாட்களாக கிலோ, 1,000 முதல், 2,000 ரூபாய் வரை மவுசு குறையாமல் விற்பனை செய்யப்படுவதால், குண்டுமல்லி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.