/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாய்க்காலில் தவறி விழுந்து கூர்க்கா பலி
/
வாய்க்காலில் தவறி விழுந்து கூர்க்கா பலி
ADDED : ஜன 16, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, இறையமங்கலம் அடுத்த பாலிக்காடு பகுதியில் வாய்க்காலில் ஒருவர் இறந்து கிடப்பதாக மொளசி போலீசாருக்கு, நேற்று அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
இறந்தவர், அப்பகுதியில் சில ஆண்டாக கூர்க்காவாக பணியாற்றி வந்துள்ளார் என்பதும், நேபாளத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இறந்தவர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் தெரியவில்லை. மொளசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

