ADDED : டிச 11, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தர் பீடத்தில் குருபூஜை விழா
சேந்தமங்கலம், டிச. 11-
கொல்லிமலையில் உள்ள ஓசானி சித்தர் பீடம், மாணிக்க சித்தர் கோவிலில், 15ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. விழாவையொட்டி, முதல்கால, இரண்டாம் கால பூஜை நடந்தது. தொடர்ந்து, அரப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து, 300க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஓசானி சித்தர் பீடத்திற்கு ஊர்வலமாக சென்றனர். பின், மாணிக்க சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்திற்கு, 300 லிட்டர் பாலில் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.