/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் சாய் தபோவனத்தில் குருபூஜை விழா கோலாகலம்
/
நாமக்கல் சாய் தபோவனத்தில் குருபூஜை விழா கோலாகலம்
ADDED : அக் 13, 2024 08:40 AM
நாமக்கல்: நாமக்கல் சாய் தபோவனத்தில் நேற்று, 106ம் ஆண்டு குருபூஜை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நாமக்கல் - பரமத்தி சாலை, வள்ளிபுரம் அடுத்த தொட்டிப்பட்டி, சீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில்,
ஒவ்வொரு வாரம் வியாழக்கிமை, ராமநவமி அன்று ஜெயந்தி விழா, குருபூர்ணிமா, குருபூஜை, ஆவணி
சித்திரை நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை தின விழா, தமிழ், ஆங்கில புத்தாண்டு மற்றும் ஆண்டுதோறும்
விஜயதசமி அன்று குருபூஜை சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி, நடப்பாண்டு, 106ம் ஆண்டு சாயி
குருபூஜை விழா, நேற்று கொண்டாடப்பட்டது.அதையொட்டி, நேற்று காலை, 8:15 மணிக்கு கூட்டு பிரார்த்தனை ஆரத்தி, தரிசனம்; 8:30 மணிக்கு கோவை,
துவாரகாமாயி குருஸ்தான் மூலம் பாபா நுாற்றாண்டு தின வஸ்திரம், சட்கா, ஷிம்டா, பாத தரிசனம்
நடந்தது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு ஸ்ரீவித்தியா ஆரம்பம் சிறப்பு ஆரத்தி நடந்தது. விழாவை
முன்னிட்டு சுவாமிக்கு ஒரு டன் பழம், காய்கறிகளை கொண்டு சிறப்பு அலங்காரம்
செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் தேங்காயை நெருப்பில் கிடத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த
ஏராளமான பக்தர்கள் பாபாவை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீசாயி தபோவனம், சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.