/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி
/
நாமக்கல்லில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டி
ADDED : நவ 22, 2024 06:36 AM
நாமக்கல்: நாமக்கல், கோட்டை நகரவை உயர்நிலைப் பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியை, தலைமையாசிரியர் மரகதம், உதவி தலைமை ஆசிரியர் ரைசா பேகம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
அதில், கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளி, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஏளூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மறப்பாளையம் அம்மன் பள்ளி, திருச்செங்கோடு எஸ்.பி.கே.,பள்ளி, ஜேடர்பாளையம் ஆர்.கே.வி., பள்ளி, கபிலர்மலை அரசு மேல்நிலைப்பள்ளி, இழுபுலி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி யைசேர்ந்த மாணவியர், 100க்கும் மேற்பட்டார் பங்கேற்றனர்.
அதில் பல்வேறு சாகசங்கள் செய்து தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெறும் மாணவியர் மாநில அளவில் நடக்கும் போட்டில் பங்கேற்பர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் ராதிகா, லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.