/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தெரு நாய்களால் தொல்லை: அலறும் கீழ்காலனி மக்கள்
/
தெரு நாய்களால் தொல்லை: அலறும் கீழ்காலனி மக்கள்
ADDED : அக் 31, 2025 01:12 AM
பள்ளிப்பாளையம், கீழ்காலனி பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்களும், வாகன ஓட்டிகளும் அச்சப்படுகின்றனர்.பள்ளிப்பாளையம் அருகே கீழ்காலனி பகுதியில் ஏராளமான நாய்கள் அங்கும், இங்கும் சுற்றித்திரிகின்றன. மேலும்,  நாய்கள் ஒன்றோடு ஒன்று கடித்து மோதுவது அச்சுறுத்தலாக உள்ளது.
சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்தி செல்வது வாடிக்கையாக உள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறியுடன் உலாவரும் தெரு நாய்களால், குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்கள் சாலையில் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.பள்ளிப்பாளையம் யூனியன் அதிகாரிகள், நாய்களை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

