ADDED : ஜூலை 04, 2025 01:20 AM
நாமக்கல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், நாமக்கல் மாநகராட்சி பெரியப்பட்டி பகுதியில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்து.
முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக பல்வேறு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை நேற்று திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக மொத்தம், 1.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியப்பட்டி, கணேசபுரம், நாட்டாகவுண்டன் புதுார்-, பள்ளிபாளையம் ஆகிய இடங்களில், புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.
நாமக்கல் பெரியப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து, புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைத்தார். எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, கமிஷனர் சிவகுமார், மாவட்ட நல அலுவலர் பூங்கொடி, துணை மேயர் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.