/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெப்ப அயற்சியால் கோழிகளுக்கு பாதிப்பு; கட்டுப்படுத்த கால்நடைத்துறை யோசனை
/
வெப்ப அயற்சியால் கோழிகளுக்கு பாதிப்பு; கட்டுப்படுத்த கால்நடைத்துறை யோசனை
வெப்ப அயற்சியால் கோழிகளுக்கு பாதிப்பு; கட்டுப்படுத்த கால்நடைத்துறை யோசனை
வெப்ப அயற்சியால் கோழிகளுக்கு பாதிப்பு; கட்டுப்படுத்த கால்நடைத்துறை யோசனை
ADDED : மார் 05, 2025 06:24 AM
நாமக்கல்: வெப்ப அயற்சியால், முட்டையிடும் கோழிகளில் இறப்பு ஏற்படும். இதை கட்டுப்படுத்த, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லுாரி மற்றும் வானிலை ஆய்வு மையம் யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த வார வானிலையில், பகல் வெப்பம், 96.8 டிகிரி பாரன்ஹீட், இரவில், 71.6 டிகிரி பாரன்ஹீட் ஆக காணப்பட்டது. மழை பதிவாகவில்லை. அடுத்த ஐந்து நாட்களுக்கு, மழையற்ற நிலை காணப்படும். பகல் வெப்பம், 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மிகாமலும், இரவு வெப்பம், 71.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும், கிழக்கிலிருந்து மணிக்கு, 12 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். கோடைகாலம் தொடங்க உள்ளதால் பகல், இரவு நேர வெப்பநிலைகளில் மாற்றம் காணப்படுகிறது. இதனால் முட்டையிடும் கோழிகளில், தீவன எடுப்பு வெப்ப அயற்சி காரணமாக குறையும்.
மேலும், வெப்ப அயர்ச்சி காரணமாக கோழிகள் இறக்க நேரிடும். ஆரம்ப கால கோடைகாலத்தை சமாளிக்கவும், வெப்ப தாக்கத்திலிருந்து கோழிகளை பாதுகாக்கவும் பகல் வேளையில், மதியம், 1:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை தீவனம் அளிக்கக் கூடாது. கோழிகளுக்கு நாள் முழுவதும் அதிக வெப்பமில்லாமல், குளிர்ச்சியாக குடிநீர் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கோழித்தீவனத்தில் சோயா எண்ணெயை சேர்ப்பதன் மூலம் வெப்ப அயற்சியை குறைக்கலாம்.
தீவனத்தில் தேவையான அளவு எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் உயிர்சத்துக்கள் சேர்ப்பதன் மூலம் வெப்ப அயற்சியின் தாக்கம் மற்றும் உற்பத்தி குறைவை தவிர்க்கலாம். கோழி பண்ணைகளில், இரவு, 12:00 முதல், 1:00 மணி வரை ஒரு மணி நேரம் விளக்குகளை எரியவிடுவதன் மூலம், தினமும் கோழிகள் உட்கொள்ளும் அடர் தீவனத்தின் அளவை அதிகரிக்கலாம். வெப்பம் அதிகமாக இருக்கும், மதிய வேளையில் தண்ணீர் தெளிப்பான்களை பயன்படுத்தி, வெப்ப தாக்கத்தை குறைக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.