/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரத்தில் பகலில் கொட்டி தீர்த்த மழை
/
ராசிபுரத்தில் பகலில் கொட்டி தீர்த்த மழை
ADDED : அக் 17, 2025 01:38 AM
ராசிபுரம், ராசிபுரத்தில் நேற்று மதியம், ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் துாறல் மழை, காற்றுடன் மழை என தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம், 12:00 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. ராசிபுரம் மட்டுமின்றி, காக்காவேரி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, பேளுக்குறிச்சி, கவுண்டம்பாளையம், பட்டணம் உள்ளிட்ட பகுதிகளிலும், ஒரு மணி நேரம் மழை பெய்தது.
காற்றுடன் கன மழை பெய்ததால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனரக வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலை, வயல்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது.
பகலில் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டத. மாலை வரை குளிர் காற்றுடன் மக்கள் சிரமப்பட்டனர். முக்கியமாக குழந்தைகள், வயதானவர்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர்.