/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல், மோகனுாரில் கொட்டிய மழை சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் அவதி
/
நாமக்கல், மோகனுாரில் கொட்டிய மழை சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் அவதி
நாமக்கல், மோகனுாரில் கொட்டிய மழை சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் அவதி
நாமக்கல், மோகனுாரில் கொட்டிய மழை சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் அவதி
ADDED : செப் 10, 2025 01:02 AM
நாமக்கல், நாமக்கல், மோகனுார் பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், ஒரு சில இடங்களில், கனமழையும், பல்வேறு இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்றும் வெயிலின் தாக்கம் காணப்பட்டது.
தொடர்ந்து, மழைவரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நாமக்கல்லில் இரவு, 9:00 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. லேசாக தொடங்கிய மழை சிறிது நேரத்தில் கனமழையாக மாறியது.
அதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்களும், ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது. மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாமக்கல் பரமத்தி சாலை, சேலம் சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி
நின்றது.
அதேபோல், மோகனுார் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில், இரவு, 8:30 மணிக்கு பெய்த கனமழை, ஒன்றரை மணி நேரத்துக்கு மேலும் நீடித்தது. தொடர்ந்து பெய்த மழையால், மக்கள் அவதிக்குள்ளாகினர். ஒரு சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மழை காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று
வீசியது.