/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேந்தமங்கலத்தில் கொட்டி தீர்த்த மழை
/
சேந்தமங்கலத்தில் கொட்டி தீர்த்த மழை
ADDED : ஜூலை 19, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் மக்கள் வெப்பத்தால் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம், 2:00 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பின், காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நான்கு மணிநேரம் கொட்டி தீர்த்த மழையால், தாழ்வான இடங்களில் குளம்போல் மழைநீர் தேங்கியது. மேலும், சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவர்கள், பெற்றோர் மழையில் நனைந்து அவதிக்குள்ளாகினர்.