ADDED : ஜூலை 13, 2024 08:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், நேற்று மதியத்திற்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
மாலை, 6:00 மணிக்கு ராசிபுரம், காக்காவேரி, சீராப்பள்ளி, பட்டணம், தண்ணீர்பந்தல்காடு, மெட்டாலா, மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கன மழை பெய்தது. காற்றுடன் மழை பெய்ததால், சாலையோர மரங்கள் சாய்ந்தன. நாமகிரிப்பேட்டை அடுத்த கட்டபுளியமரம் பகுதியில் சாலையோரம் இருந்த மரம் சாய்ந்தது. ராசிபுரம் - ஆத்துார் பிரதான சாலை நடுவே மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

