/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கனமழையால் பாதிப்பு: உடனடி நடவடிக்கைக்கு 330 பொறுப்பாளர்கள்
/
கனமழையால் பாதிப்பு: உடனடி நடவடிக்கைக்கு 330 பொறுப்பாளர்கள்
கனமழையால் பாதிப்பு: உடனடி நடவடிக்கைக்கு 330 பொறுப்பாளர்கள்
கனமழையால் பாதிப்பு: உடனடி நடவடிக்கைக்கு 330 பொறுப்பாளர்கள்
ADDED : செப் 21, 2024 03:12 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவ-டிக்கைகள் மற்றும் தயார் நிலை பணிகள் குறித்த ஆலோசனைக்-கூட்டம் நடந்தது.
கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது: தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையானது, வரும், அக்.,ரில் தொடங்கவுள்-ளதால், அதிக மழை பொழியும்பட்சத்தில், அதனால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையிலும்,
இழப்புகளை குறைக்கும் நோக்கத்திலும், சரியாக திட்டமிட்டு பேரிடர் முன்-னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.நாமக்கல் மாவட்டத்தில், கடந்த காலங்களில் பெய்த மழையின் அடிப்படையில், அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களாக, 4
இடங்கள், மிதமாக பாதிப்பிற்குள்ளாகும் இடங்களாக, 28, குறைவாக பாதிப்பிற்குள்ளாகும், ஒரு இடம் என மொத்தம், 33 இடங்கள்
கண்டறியப்பட்டுள்ளன. மேற்படி, கனமழையின் கார-ணமாக பாதிப்புக்குள்ளாகும் என அடையாளம் காணப்பட்ட இடங்களில்
உடனடி நடவடிக்கை மேற்கொள்ள, முதல் பொறுப்-பாளர்களாக நாமக்கல் மாவட்டத்தில், 330 பொறுப்பாளர்கள்
நிய-மிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.டி.ஆர்.ஓ., சுமன், ஆர்.டி.ஓ.,க்கள் பார்த்தீபன், சுகந்தி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.