/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் கன மழை கொக்குவாரி ஆற்றில் நீர்வரத்து
/
கொல்லிமலையில் கன மழை கொக்குவாரி ஆற்றில் நீர்வரத்து
கொல்லிமலையில் கன மழை கொக்குவாரி ஆற்றில் நீர்வரத்து
கொல்லிமலையில் கன மழை கொக்குவாரி ஆற்றில் நீர்வரத்து
ADDED : அக் 14, 2024 06:19 AM
எருமப்பட்டி: தமிழகத்தில், கடந்த, 15 நாட்களாக பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதேபோல், நாமக்கல் மாவட்-டத்தில் சேந்தமங்கலம், புதுச்சத்திரம், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மழை பெய்துள்ளது.
கடந்த சில நாட்களாக கொல்லிமலையில் பெய்து வரும் கன மழையால், எருமப்பட்டி அடிவாரத்தில் உள்ள சிங்களகோம்பை ஏரிக்கு தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. கொக்காற்றில் வரும் இந்த தண்ணீர் கோம்பை வழியாக தரைப்பாலத்தை கடந்து செல்-கிறது.இந்நிலையில், இரவில் கொல்லிமலையில் மிக கன மழை பெய்து வருவதால், தரைப்பாலம் மூழ்கும் நிலை உள்ளது. இதனால், கோம்பை பகுதியில் உள்ள நுாற்றுக்கணக்கான விசா-யிகள் தண்ணீர் குறையும் வரை தரைப்பாலத்தை தாண்டி அவசர பணிக்காக கூட வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.