/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல், மோகனுாரில் கொட்டி தீர்த்த மழை
/
நாமக்கல், மோகனுாரில் கொட்டி தீர்த்த மழை
ADDED : அக் 24, 2025 01:23 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 423 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.
வடகிழக்கு பருவமழை, தமிழக வட கடலோர மாவட்டங்களில் தீவிரமடைய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை மற்றும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு நாள் முழுவதும் மழை பெய்து வந்தது.
நகர் பகுதியில் இரவு, 8:00 மணிக்கு தொடங்கிய மழை, அதிகாலை 2:00 மணி வரை கொட்டியது. நாமக்கல், பரமத்தி சாலையில் வெள்ளம்போல் மழைநீர் சென்றது. மோகனுார், ப.வேலுார் சாலை வள்ளியம்மன் கோவில் அருகே, ரயில்வே மேம்பாலம் வரை மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. இதனால், வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இப்பகுதியில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் வசதி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. மோகனுார், நாமக்கல் நகர் பகுதியில் அதிகபட்சமாக, 90 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழையளவு விபரம்; குமாரபாளையம், 3.2 மி.மீ., மங்களபுரம், 12.60, பரமத்தி வேலுார், 35, ராசிபுரம், 22, சேந்தமங்கலம், 61.2, திருச்செங்கோடு, 18, கலெக்டர் அலுவலகம், 19, கொல்லிமலை, 35 என மாவட்டம் முழுவதும், 423 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.
* கொல்லிமலையில் பெய்து வரும் தொடர் மழையால், அடிவார பகுதியான காரவள்ளி அடுத்துள்ள, வெண்டாங்கி கருவட்டாறு ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

