/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமகிரிப்பேட்டையில் கொட்டி தீர்த்த மழை
/
நாமகிரிப்பேட்டையில் கொட்டி தீர்த்த மழை
ADDED : அக் 14, 2024 05:30 AM
நாமகிரிப்பேட்டை: ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதிகளில், நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது துாறல் மழையும் பெய்து வந்தது.
இந்நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு காற்று, இடி மின்னலுடன் கன மழை பெய்ய தொடங்கியது. நாமகிரிப்பேட்டையில், ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.நாமகிரிப்பேட்டை மட்டுமின்றி சீராப்பள்ளி, ஒடுவன்கு-றிச்சி, பேளுக்குறிச்சி, தண்ணீர்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, ஆர்.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. வயல்களில் தண்ணீர் தேங்கியது. விளைந்து நின்ற சோளத்தட்-டுகள் தரையில் சாய்ந்தன. சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது.
நாமகிரிப்பேட்டை - ஆத்துார் பிரதான சாலையில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளால் போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டது. குழிவெட்டப்பட்ட பகுதி சேறும், சகதியு-மாக மாறியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதேபோல், ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, கவுண்டம்பாளையம், அணைப்பா-ளையம், சந்திரசேகரபுரம் உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்தது.