/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் கன மழையால் வெள்ளப்பெருக்குமுறையாக துார் வாராததால் விளை நிலங்கள் சேதம்

ADDED : டிச 04, 2024 01:55 AM
சேந்தமங்கலம், டிச. 4-
'பெஞ்சல்' புயல் காரணமாக, கொல்லிமலையில் பெய்த கன மழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, அடிவார பகுதிகளில் உள்ள நெல், வாழை வயல்களில் புகுந்து சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவான, 'பெஞ்சல்' புயல் காரணமாக, தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. கொல்லிமலையில், கடந்த, 4 நாட்களாக பெய்த அதி கனமழையால், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, அடிவார பகுதிகளான காரவள்ளி, துத்திகுளம், சேந்தமங்கலம் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு சென்று நிரம்பியது. இந்த ஏரிகளையும், தண்ணீர் வரும் வாய்க்கால்களையும் பொதுப்பணித்துறையினர் முறையாக துார்வாராமல் விட்டதால், பல்வேறு இடங்களில் காட்டாற்று வெள்ளநீர், வாய்க்கால்களில் செல்ல வழியின்றி விளை நிலங்களில் புகுந்தது.
பொம்மசமுத்திரம் ஏரி அருகே, வாய்க்கால் துார்வாராததால் மழைநீர் அங்குள்ள வாழை தோப்பில் புகுந்தது. சேந்தமங்கலம், காந்திபுரம் அருகே வாய்க்கால் துார்வாராததால், வாய்க்கால் நிரம்பி தென்னை, முத்துச்சோள வயல்களில் புகுந்தது. துத்திக்குளம் அருகே, கரும்பு பயிரிட்டுள்ள வயலில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
மேலும், கொல்லிமலை பெரியாற்றில் இருந்து காட்டாற்று வெள்ளம் குறையாமல் வந்து கொண்டிருப்பதால், ஏரிகள் நிரம்பி வாய்க்கால்களில், 2வது நாளாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதை ஏராளமானோர் பார்த்து செல்கின்றனர்.