ADDED : ஜூலை 26, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், கொல்லிமலையில், நேற்று காலையில் அதிக பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் பாதிப்புக்குள்ளாகினர்.
காலை நேரத்தில் விற்பனைக்கு வரும் காய்கறி, பழங்களை கொண்டு வரும் வியாபாரிகள், மிகவும் சிரமப்பட்டு வெளியே சென்றனர். சுற்றுலா வந்த பயணிகள், தங்களது வாகனத்தின் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர்.