/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொக்கராயன்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
/
கொக்கராயன்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
கொக்கராயன்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
கொக்கராயன்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூன் 09, 2025 04:29 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், சாலையை விரி-வுபடுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.
இதுகுறித்து, கொக்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்த சர-வணன் கூறிதாவது: கொக்கராயன்பேட்டை வழியாக, பழனி, கரூர், கோவை, பெருந்துறை உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் கொக்கராயன்பேட்டை பகுதி சாலை வழியாக தொடர்ந்து பஸ், லாரி, கார், டூவீலர் என வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். கொக்கராயன்பேட்டை பகுதியில் சாலை குறுகியதாக உள்ளது. இதனால் ஓரிரு வாகனங்கள் சாலையில் நிறுத்தினால், போக்குவ-ரத்து நெரிசல் ஏற்பட்டுவிடும். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
நேற்று காலை, 7:30 முதல், 8:30 மணி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டூவீலர் கூட செல்ல முடியாத-ளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொக்க-ராயன்பேட்டை பகுதி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்வதால், இப்பகுதியில் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவிட்டு, சாலையை விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.