/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் உதவி மையம்
/
மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் உதவி மையம்
ADDED : பிப் 16, 2024 10:37 AM
நாமக்கல்: நாமக்கல் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், படிவங்கள் பதிவேற்றம் செய்ய சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொடர்பான, 18 அமைப்பு சாரா தொழிலாளர்களின் மனுக்கள் உள்ளிட்ட அனைத்து விண்ணப்பங்களும் tnuwwb.gov.in என்ற தொழிலாளர் துறை இணையதளம் வாயிலாக பெறப்படுகிறது. தற்போது கணினி சர்வர் பழுது காரணமாக, இழப்பு ஏற்பட்ட ஆவணங்களை மீட்க இயலாத நிலையில், 2023 டிச.,2 ஆம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்களுக்கு மீண்டும் பதிவேற்றம் செய்ய ஏதுவாக, நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் வாயிலாக பதிவு பெற்ற தொழிலாளர்கள் தங்கள் ஆவணங்களை மீண்டும் பதிவேற்றம் செய்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.