/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருவண்ணாமலையில் 7 பேர் பலியான இடத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆய்வு
/
திருவண்ணாமலையில் 7 பேர் பலியான இடத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆய்வு
திருவண்ணாமலையில் 7 பேர் பலியான இடத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆய்வு
திருவண்ணாமலையில் 7 பேர் பலியான இடத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆய்வு
ADDED : டிச 15, 2024 03:30 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், அண்ணாமலையார் மலை மீது மண் சரிவு ஏற்பட்டு, 7 பேர் பலியான இடத்தை, உயர்நீதிமன்ற நீதி-பதி எஸ்.எஸ்.சுந்தர் ஆய்வு செய்தார்.
சமூக சேவகர் யானை ராஜேந்திரன் என்பவர், அண்ணாமலையார் மலை மற்றும் கிரிவலப்பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்-டுள்ள கட்டடங்களை அப்புறப்படுத்த கோரி, சென்னை உயர்நீதி-மன்றத்தில் சில மாதங்களுக்கு முன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்றம் கிரிவலப்பாதையில் உள்ள குளம் ஆக்கிரமிப்பு, ஓடை ஆக்கிரமிப்பு மற்றும் கட்டடங்களை அகற்ற உத்தரவிட்டது.இதற்காக மாவட்ட நிர்வாகமும் ஆய்வு செய்த வந்த நிலையில், கடந்த, 1, 2ம் தேதி கன மழை பெய்தது.
இதில், 1ம் தேதி மாலை அண்ணாமலையார் மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி., நகரில் ஒரு வீட்டிலிருந்த ஏழு பேர் பலியாகினர். இதை தொடர்ந்து நிலச்ச-ரிவு ஏற்பட்ட இடங்களை புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதி-காரிகள் ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்-பினர்.
இதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சுந்தர், அண்ணாமலையார் மலை மீது மண் சரிவு ஏற்பட்டு, 7 பேர் பலியான இடத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு நடத்-தினார்.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்.பி.,சுதாகரிடம், மண் சரிவு ஏற்பட்ட விதம் மற்றும் மீட்பு பணி குறித்த விவரங்களை நீதிபதி கேட்டறிந்தார்.