/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கவர்னர் அறிவுறுத்தலுக்கு உயர் கல்வி அமைச்சர் பதில்
/
கவர்னர் அறிவுறுத்தலுக்கு உயர் கல்வி அமைச்சர் பதில்
கவர்னர் அறிவுறுத்தலுக்கு உயர் கல்வி அமைச்சர் பதில்
கவர்னர் அறிவுறுத்தலுக்கு உயர் கல்வி அமைச்சர் பதில்
ADDED : டிச 21, 2024 01:15 AM
சென்னை, டிச. 21--
உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கவர்னர் அறிக்கையில், யு.ஜி.சி., குழு தலைவரின் நியமன உறுப்பினரை, துணைவேந்தர் தேடுதல் குழுவில் சேர்ப்பதில், உள்நோக்கம் இருப்பது தெரிகிறது.
பல்கலை சட்டத்தின் அடிப்படையிலேயே, துணைவேந்தர் தேர்வுக்கான தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. யு.ஜி.சி.,யின் நெறி
முறைகள் பரிந்துரை
மட்டுமே. அதை அப்படியே பின்பற்ற, மாநில அரசுகளை நிர்ப்பந்தம் செய்வது, மக்களால் தேர்ந்தெடுத்த அரசுக்கு அரசியல் உள்நோக்கத்தோடு கொடுக்கும் நெருக்கடியாகும்.
இதை கவர்னர் தவிர்த்து, பல்கலைகள் கல்வி பணியாற்ற வழிவிட வேண்டும். பல்கலைகளின் செயல்பாடுகளில், தேவையற்ற வகையில் மூக்கை நுழைப்பது போன்ற கவர்னரின் நடவடிக்கைகளுக்கு, நீதிமன்றம் பலமுறை குட்டு வைத்தும், தன் செய்கையை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. இது, கவலைக்குரியது மட்டுமல்ல; கவர்னரின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. கவர்னர் இவ்வாறு தொடர்ந்து தலையிடுவதால், பல பல்கலைகளின் நிர்வாகம், கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மாணவர்களின் எதிர்காலமும், கேள்விக்குறி ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. நிர்வாக குளறுபடிகளுக்கு காரணமான தன் செயல்களை, கவர்னர் இனியாவது நிறுத்தி, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை அளிக்க முன்வர வேண்டும். இவ்வாறு ???? ?????????????.அவர் கூறியுள்ளார்.