/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குதிரை சாலையை தார்ச்சாலையாக மாற்ற மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு
/
குதிரை சாலையை தார்ச்சாலையாக மாற்ற மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு
குதிரை சாலையை தார்ச்சாலையாக மாற்ற மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு
குதிரை சாலையை தார்ச்சாலையாக மாற்ற மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு
ADDED : ஆக 26, 2025 01:46 AM
நாமக்கல், சேலுார் நாடு, குழிப்பட்டி முதல் எருமப்பட்டி வழியாக நாமக்கல் வரை, குதிரை சாலையை, தார்ச்சாலையாக மாற்றக்கோரி, மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கொல்லிமலை தாலுகா, சேலுார் நாடு, தின்னனுார் நாடு, தேவனுார் நாடு பகுதிகளில், 4,000க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 15,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். எங்கள் பகுதியில் இருந்து சமவெளி பகுதிக்கு செல்ல, நான்கு மணி நேரம் பயணம் செய்கிறோம்.
குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. மாவட்ட தலைநகர் வருவதற்கு, 90 கி.மீ.,க்கு மேல் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால், எங்களுக்கு மிகுந்த பொருள் மற்றும் நேர விரயம் ஏற்படுகிறது. குறிப்பாக, சேலுார் நாடு மணப்பாறை சந்தையில் இருந்து மேற்படி குதிரை சாலைக்கு வருவதற்கு வெறும், இரண்டு கி.மீ., துாரமே உள்ளது.தற்போது, நீண்ட துாரம் பயணித்து மணப்பாறை சந்தைக்கு வியாபாரிகள் வராததால், விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை சொற்ப விலைக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, கொல்லிமலை மலைவாழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, குதிரை சாலையை, தார்ச்சாலையாக புனரமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

