/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒகேனக்கல் காவிரியாற்றில் 18 நாட்களுக்கு பின் பரிசல் பயணம்
/
ஒகேனக்கல் காவிரியாற்றில் 18 நாட்களுக்கு பின் பரிசல் பயணம்
ஒகேனக்கல் காவிரியாற்றில் 18 நாட்களுக்கு பின் பரிசல் பயணம்
ஒகேனக்கல் காவிரியாற்றில் 18 நாட்களுக்கு பின் பரிசல் பயணம்
ADDED : ஜூலை 15, 2025 01:57 AM
ஒகேனக்கல், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் முன்தினம் நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு வினாடிக்கு, 18,000 கன அடியாக சரிந்தது. நேற்று முன்தினம் காவிரியாற்றில் பரிசல் இயக்க, 17 நாட்களுக்கு பின், தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தும், பரிசல் ஓட்டிகள், 8,000 கன அடி வரை அத்திமரத்து கடவு பரிசல் துறையிலிருந்தும், 30,000 கன அடி வரை ஊட்டமலை பரிசல் துறையிலும், 50,000 கன அடி வரை சின்னாறு பரிசல் துறையிலிருந்தும் பரிசல் இயக்க அனுமதிக்கக்கோரிக்கை விடுத்து நேற்று முன்தினம் பரிசல்களை இயக்கவில்லை.
இந்நிலையில் நேற்று, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ், தி.மு.க., - எம்.பி., மணி, பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி உள்ளிட்டோர் பரிசல் ஓட்டிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பரிசல் பயணத்தை தொடங்கி வைத்தனர். கலெக்டர் சதீஸ் மலர் துாவி பரிசல் பயணத்தை தொடங்கி வைத்து, இனிப்பு வழங்கினார். எவ்வித முன் அறிவிப்பின்றி பரிசல்கள் இயக்கப் பட்டதால், சுற்றுலா பயணிகளின்றி பரிசல் துறை வெறிச்சோடியது. தொடர்ந்து, 19வது நாளாக காவிரியாற்றில்
குளிக்க தடை தொடர்கிறது.