/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விஷம் குடித்த ஓட்டல் மேலாளர் உயிரிழப்பு
/
விஷம் குடித்த ஓட்டல் மேலாளர் உயிரிழப்பு
ADDED : அக் 04, 2025 01:12 AM
சேந்தமங்கலம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் அரவிந்த், 35; ஓட்டல் மேலாளர். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. அரவிந்த், பெற்றோரின் மருத்துவ செலவுக்கு கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். கடந்த மாதம், 28ல் கொல்லிமலைக்கு தன் மனைவி, மகனுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
அங்குள்ள ஒரு கொண்டை ஊசி வளைவில் டூவீலரை நிறுத்திவிட்டு, காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வெளியே வந்துள்ளார். அப்போது, மனைவியிடம், 'தான் விஷம் குடித்து விட்டேன்' எனக்கூறி விட்டு மயக்கமடைந்தார். அதிர்ச்சியடைந்த மனைவி, அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அரவிந்த், கடந்த, 30ல் இறந்தார். வாழவந்தி நாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.