/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மழையால் வீடுகள் பாதிப்பு: ரேஷன் அரிசியுடன் முடிந்த நிவாரணம்
/
மழையால் வீடுகள் பாதிப்பு: ரேஷன் அரிசியுடன் முடிந்த நிவாரணம்
மழையால் வீடுகள் பாதிப்பு: ரேஷன் அரிசியுடன் முடிந்த நிவாரணம்
மழையால் வீடுகள் பாதிப்பு: ரேஷன் அரிசியுடன் முடிந்த நிவாரணம்
ADDED : மே 29, 2024 07:30 AM
ராசிபுரம் : ராசிபுரம் அருகே, மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு, ரேஷன் அரிசி மட்டும் வழங்கி நிவாரணத்தை முடித்துக்கொண்டனர்.ராசிபுரம் யூனியனில், அணைப்பாளையம் கிராமம் தாழ்வான பகுதியில் உள்ளது.
இங்கு தேங்கும் மழைநீர் அருகில் உள்ள ஏரிக்கு சென்று விடும். ஆனால், குறுக்கே ராசிபுரம் புறவழிச்சாலை அமைந்துள்ளது. அப்போது, நீர் வெளியேற கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால், அவற்றை மண் மூடியதால் கடந்த, 21ல் பெய்த மழைநீர் வெளியேறாமல் அணைப்பாளையம் கிராமத்தில் தண்ணீர் தேங்கியது. மேலும், 12க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் துாங்க முடியாமல் சாலைக்கு வந்தனர். இதுகுறித்து, தகவல் கிடைத்தவுடன் உள்ளாட்சி அமைப்புகள், வருவாய் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் உடனடியாக, 3 பொக்லைன் இயந்திரம் மூலம் மழைநீர் வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் உள்ள கோவில்களில் தங்க வைக்கப்பட்டனர். கலெக்டர் உமா பாதிக்கப்பட்ட வீடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.இதையடுத்து, கிராம மக்களுக்கு ரேஷன் அரிசி, 10 கிலோ, பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை ஒன்றும் வழங்கப்பட்டது. பொதுமக்கள் மட்டுமின்றி, பா.ஜ., கட்சியினர், மாவட்ட வெள்ள நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டனர். ஆனால், ஒரு வாரமாகியும் எந்த நிதியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லை.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:சாலை விரிவாக்கத்தின் போது தண்ணீர் செல்லும் பைப்பை மண் கொட்டி மூடியது தான் இந்த பிரச்னைக்கு காரணம். நெடுஞ்சாலைத்துறையினர் செய்த தவறுக்கு பாதிக்கப்பட்டது அப்பாவி கிராம மக்கள் தான். நிவாரண தொகை வழங்கியிருந்தால் உதவியாக இருக்கும். ஆனால், ரேஷன் அரிசி, வேட்டியை மட்டும் கொடுத்துவிட்டு அதிகாரிகள் சென்றுவிட்டனர் என, வேதனையுடன் கூறினர்.தாசில்தார் சரவணனிடம் கேட்டபோது, ''நிவாரண தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண தொகை கிடைக்கும்,'' என்றார்.