/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முத்துக்காப்பட்டி பஞ்.,ல் மனித சங்கிலி போராட்டம்
/
முத்துக்காப்பட்டி பஞ்.,ல் மனித சங்கிலி போராட்டம்
ADDED : நவ 28, 2024 01:19 AM
முத்துக்காப்பட்டி பஞ்.,ல் மனித சங்கிலி போராட்டம்
சேந்தமங்கலம், நவ. 28-
எருமப்பட்டி யூனியனில், முத்துக்காப்பட்டி பஞ்சாயத்து உள்ளது. இங்கு, 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பஞ்சாயத்து நிதியாக, வங்கி கணக்கில், 7 லட்சம் ரூபாய் உள்ளது. இந்த பணத்தை, அடிப்படை வசதிகளுக்கு செலவு செய்யாமல், பி.டி.ஓ., சுகிதா மற்ற பணிகளுக்கு செலவு செய்கிறார். இதனால், பஞ்சாயத்தில் சுகாதார பணிகள், ஆழ்துளை கிணறு, பொதுக்கிணறு பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் பாதிக்கிறது என, குற்றச்சாட்டு தெரிவித்து, நேற்று முத்துக்காப்பட்டி பஞ்., அலுவலகம் முன், தலைவர் அருள்ராஜேஸ் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் சார்பில், சேந்தமங்கலம் மெயின் ரோட்டில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து, பி.டி.ஓ., சுகிதா கூறுகையில், ''பஞ்., நிதியை அரசு விதிகளு க்கு உட்பட்டு மூலதன பணி செலவுகள் போக, மற்ற பணிகளுக்கு பயன்படுத்த அறிவரை வழங்கப்பட்டுள்ளது. நாளை (இன்று) கவுன்சிலர்களை வரவழைத்து முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.