/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மனைவி தற்கொலை செய்த கிணற்றில் கணவனும் பலி
/
மனைவி தற்கொலை செய்த கிணற்றில் கணவனும் பலி
ADDED : ஆக 22, 2025 11:10 PM
சேந்தமங்கலம்:மனைவி தற்கொலை செய்து கொண்ட கிணற்றில் விழுந்து, கணவனும் தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை எடப்புலிநாடு, செங்கரை அடுத்த பவர்காட்டை சேர்ந்தவர் செல்லதுரை, 45; இவரது மனைவி பூமதி, 40. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் மனமுடைந்த பூமதி, தங்களின் விவசாய தோட்டத்து கிணற்றில் குதித்து, கடந்தாண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோகத்தால் குடிப்பழக்கத்துக்கு செல்லதுரை அடிமையானார்.
நேற்று முன்தினம் மாலை, மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே கிணற்றில் செல்லதுரையும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் தேடியபோது கிணற்றில் சடலமாக மிதப்பது தெரிந்தது. செங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.