/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஐ.ஏ.எஸ். என கூறி திருமணம் வாலிபர், பெற்றோர் மீது வழக்கு
/
ஐ.ஏ.எஸ். என கூறி திருமணம் வாலிபர், பெற்றோர் மீது வழக்கு
ஐ.ஏ.எஸ். என கூறி திருமணம் வாலிபர், பெற்றோர் மீது வழக்கு
ஐ.ஏ.எஸ். என கூறி திருமணம் வாலிபர், பெற்றோர் மீது வழக்கு
ADDED : ஜன 13, 2024 01:03 AM
மோகனுார்:நாமக்கல் மாவட்டம், மோகனுாரை சேர்ந்தவர் அகல்யா, 27, எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கும், நாமக்கல் டவுன் ஏ.எஸ்.பேட்டை, முல்லை நகரை சேர்ந்த ராஜா, 35, என்பவருக்கும், 2021 பிப். 24ல், பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்துக்கு முன், ராஜா தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறியதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின், வேலைக்கு செல்லாமல் ராஜா வீட்டிலேயே இருந்தார். இதனால், சந்தேகமடைந்த அகல்யா, ராஜாவின் மொபைல் போனை ஆய்வு செய்தார்.
அப்போது தான், அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி இல்லை என்பது தெரிந்தது. இதையடுத்து, கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது; அகல்யாவை ராஜாவின் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தி உள்ளனர். உயிருக்கு பயந்த அகல்யா, மோகனுாரில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். தொடர்ந்து, இது தொடர்பாக, மோகனுார் போலீசில், கடந்த, 8ல் புகாரளித்தார்; தலைமறைவான ராஜா உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர்.