/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் முறை
/
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் முறை
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் முறை
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் முறை
ADDED : ஜூலை 08, 2025 01:53 AM
புதுடில்லி :காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பை, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் முறையை அமல்படுத்திய, முதல் மாநிலம் என்ற அங்கீகாரத்தை தமிழகம் பெற்றுள்ளது.
இதுகுறித்து தமிழக காசநோய் தடுப்புப்பிரிவு அதிகாரி டாக்டர் ஆஷா பெட்ரிக் கூறியதாவது:
தீவிர காசநோய் பாதிப்பை கண்டறிவதன் மூலமாக, மருத்துவமனைகளில் அதற்கேற்ப சிகிச்சை அளிக்க முடியும். இதன் மூலம் இறப்பு விகிதத்தை குறைக்கும் நோக்கத்தில், புதிய கணக்கீடு முறை தமிழகத்தில் முதன் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இணைய செயலியுடன் இந்த முறை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காசநோய் பாதிக்கப்பட்டவரின் உடல் எடை, ஊட்டச்சத்து குறைபாடு, சுவாசக் கோளாறு, கால் மற்றும் கணுக்காலில் வீக்கம், ஆக்சிஜன் குறைபாடு, தானாகவே எழுந்து நிற்பது உள்ளிட்ட ஐந்து அடிப்படை காரணிகளை வைத்து, தீவிர பாதிப்பை சுகாதார பணியாளர்களால் அறிய முடியும். நம் நாட்டில் தமிழகத்தில் மட்டுமே இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. காச நோயாளிகளின் உடல்நலனில் ஐந்து அடிப்படை பிரச்னைகளை கண்காணித்து, அதற்கேற்ப அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.