/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'பார்த்தீனியம்' செடிகளை கட்டுப்படுத்த யோசனை
/
'பார்த்தீனியம்' செடிகளை கட்டுப்படுத்த யோசனை
ADDED : மார் 18, 2024 02:53 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை விவசாய நிலத்தில், 'பார்த்தீனியம்' செடியை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், பார்த்தீனியம் செடி அதிகளவு வளர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, 10 லிட்டர் தண்ணீருடன், 3 கிலோ கல் உப்பு நன்கு கரைத்து வடிகட்டி தெளிப்பான் மூலம் பார்த்தீனியம் செடிகளில் தெளிப்பதால், செடிகள் ஒரு மணி நேரத்திற்குள் வாடி இறந்துவிடும். இந்த தெளிப்பானை காலை நேரத்தில் பயன்படுத்துவது நல்லது. இந்த செடியை பூ பூக்கும் முன்பே பிடுங்கி அளிப்பதன் மூலம் அடுத்ததாக வேகமாக பரவும் சதவீதத்தை குறைக்க முடியும். உப்பு கரைசலோடு, இரண்டு, மூன்று எலுமிச்சை சாறு மற்றும் கடுக்காய் தோல் பொடியையும் கலந்து தெளிப்பதன் மூலம், பார்த்தீனியத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

