தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆமணக்கு மகசூல் அதிகரிக்க யோசனை

ஆமணக்கு மகசூல் அதிகரிக்க யோசனை

ஆமணக்கு மகசூல் அதிகரிக்க யோசனை


ADDED : மே 04, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2026 04:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமகிரிப்பேட்டை;ராசிபுரம் வேளாண்துறை, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆமணக்கு பயிரில் பெண் மலர்களின் எண்ணிக்கையை, 95 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கவும், 90 சதவீதம் வரை விதைகள் உருவாகவும் பயிர் ஊக்கியான, 'கன்சார்ட்டியா' பயன்படுத்த வேண்டும். இதை, ஒரு லிட்டர் தண்ணீரில், 0.5 மி.லி., என்ற விகிதத்தில் கலந்து, பயிர் நடவு செய்த, 25 மற்றும் 60வது நாட்களில் இலை வழியாக தெளிக்க வேண்டும். காலை அல்லது மாலை நேரங்களில் தெளிப்பது அவசியமாகும்.

மானாவாரியில் ஆமணக்கு பயிரிடும் போது, 1 சதவீத பொட்டாசியம் குளோரைடுடன் விதையை, 3 மணி நேரம் ஊறவைத்து கடினப்படுத்த வேண்டும். பருவமழை தொடங்குவதற்கு, ஒரு வாரத்திற்கு முன்பாக விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும். விதையை கடினப்படுத்துவதால் அதன் முளைப்புத்திறன் அதிகரிப்பதுடன், வறட்சியை தாங்கி வளரும்.

ஆமணக்கு பயிரில் போர்ட்ரையோ டினியா சாம்பல் பூசணத்தை கட்டுப்படுத்த கார்பென்டாசிம், 0.1 சதவீதத்தை, 25 மற்றும் 60வது நாட்களில் இலை வழியாக தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பூங்கொத்துகளில் பூசண தாக்குதல் குறைந்து கூடுதல் மகசூல் கிடைக்கும். மேலும் ஆமணக்குடன் வெங்காயத்தை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். 1:2 என்ற விகிதத்தில் ஆமணக்கு மற்றும் வெங்காயம் பயிரிட வேண்டும். இதற்காக, 1.5 மீ., மற்றும் 1.0 மீ., இடைவெளி விட வேண்டும். வெங்காய செடிக்கு, 30 செ.மீ., இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.

இந்த ஊடுபயிர் முறையில் களைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடு குறைந்து விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us