/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'பாலியல் தொடர்பான புகார்கள் வந்தால் போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கணும்'
/
'பாலியல் தொடர்பான புகார்கள் வந்தால் போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கணும்'
'பாலியல் தொடர்பான புகார்கள் வந்தால் போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கணும்'
'பாலியல் தொடர்பான புகார்கள் வந்தால் போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கணும்'
ADDED : ஜன 04, 2025 01:25 AM
நாமக்கல், ஜன. 4-
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதையடுத்து, மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை, அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை சமுதாய கூட்டத்தில், மாணவ, மாணவியரின் பாதுகாப்பு தொடர்பாக, அனைத்து கல்லுாரி முதல்வர்களுடனான கலந்தாய்வு கூட்டம், நேற்று நடந்தது. கூடுதல் எஸ்.பி.,க்கள் தனராசு, சண்முகம், ஏ.எஸ்.பி., ஆகாஷ்ஜோஷி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தலைமை வகித்து பேசியதாவது: கல்லுாரியில் பாலியல் தொடர்பாக, எந்தவொரு புகார் வந்தாலும் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த பிரச்னை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்த பின் எங்கள் கவனத்திற்கு வரும்போது, சம்பந்தப்பட்ட கல்லுாரி முதல்வர், நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்த வேண்டும். சரியான பாதுகாப்பு அலுவலர்களை (செக்யூரிட்டி) தேர்வு செய்து நியமனம் செய்ய வேண்டும்.
அவ்வாறு பாதுகாவலர்களை நியமனம் செய்யும்போது, அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு, போக்சோ சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

