ADDED : அக் 04, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
திருச்செங்கோடு:திருச்செங்கோட்டில், சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டு, மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்செங்கோடு - சங்ககிரி ரோட்டில் ரூரல் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பால்மடை அருகில் திண்டுக்கல் மாவட்டம், சின்னையன்பட்டியை
சேர்ந்த அழகுராஜ், 42, சட்ட விரோதமாக மதுபானங்களை விற்றுக் கொண்டு
இருந்தார். அவரை கைது செய்து, 28 மது பாட்டில், 500 ரூபாயை பறிமுதல்
செய்தனர். இதே போல சங்ககிரி ரோட்டில் அருவி தாபா அருகே மதுபானம்
விற்றுக்கொண்டு இருந்தவர், போலீசாரை பார்த்தவுடன் தப்பி விட்டார்.
அந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 18 பீர் பாட்டில், 15
குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை தேடி
வருகின்றனர்.
