/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கள்ளச்சாராயம் விற்பனையா கொல்லிமலையில் சோதனை
/
கள்ளச்சாராயம் விற்பனையா கொல்லிமலையில் சோதனை
ADDED : ஜூன் 21, 2024 07:12 AM
சேந்தமங்கலம் : கொல்லிமலை மலைப்பகுதியில், கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா என, போலீசார் சோதனை செய்தனர்.நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சுற்றுலா தளமாக உள்ளது.
இங்குள்ள மலைப்பகுதி அதிக வனப்பகுதியாக உள்ளதால், பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, கொல்லிமலையில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொல்லிமலையில் உள்ள திருப்புலி நாடு, பைல்நாடு உள்ளிட்ட 14 பஞ்.,களிலும் வாழவந்தி நாடு எஸ்.ஐ., தியாகராஜன் தலைமையில், ஒரு தனிப்படையினரும், செங்கரை எஸ்.ஐ., மதன்குமார் தலைமையில் ஒரு தனிப்படையினரும் வாழை தோப்பு, மிளகு மர காடுகள், வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாராய ஊறல்கள் உள்ளதா என சோதனை செய்தனர்.