/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் அஸ்வின் ரெசிடென்சி நவீன தங்கும் விடுதி திறப்பு விழா
/
நாமக்கல்லில் அஸ்வின் ரெசிடென்சி நவீன தங்கும் விடுதி திறப்பு விழா
நாமக்கல்லில் அஸ்வின் ரெசிடென்சி நவீன தங்கும் விடுதி திறப்பு விழா
நாமக்கல்லில் அஸ்வின் ரெசிடென்சி நவீன தங்கும் விடுதி திறப்பு விழா
ADDED : ஆக 28, 2025 01:28 AM
நாமக்கல், நாமக்கல், பெரியப்பட்டி சாலை பொன்னர் சங்கர் நகரில், ஓட்டல் அஸ்வின் ரெசிடென்சி என்ற பெயரில் நவீன தங்கும் விடுதி தொடங்கப்பட்டு உள்ளது. பிரமாண்டமான கட்டடத்தில் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள, விடுதியின் திறப்புவிழா நேற்று நடந்தது.
நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, விடுதியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., சேகர் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., நிர்வாகிகள், தொழிலதிபர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.
நவீன தங்கும் விடுதியில் அனைத்து வசதிகளுடன், 22 அறைகள் இருப்பதாகவும், இவை குறைந்த வாடகைக்கு விடப்படும் எனவும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். முன்னதாக விழாவுக்கு வந்த அனைவரையும், ஸ்ரீசாரா குரூப்ஸ் மற்றும் அஸ்வின் பீட்ஸ் உரிமையாளர் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். இந்த நிறுவனத்திற்கு சொந்தமான, ஸ்ரீ அஸ்வின் கிராண்ட் தங்கும் விடுதி உழவர்சந்தை எதிரில் உள்ள பொய்யேரிக்கரை சாலையில், வெற்றிகரமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.