/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமகிரிப்பேட்டை யூனியனில் 2 ஆர்.ஓ., பிளான்ட் திறப்பு
/
நாமகிரிப்பேட்டை யூனியனில் 2 ஆர்.ஓ., பிளான்ட் திறப்பு
நாமகிரிப்பேட்டை யூனியனில் 2 ஆர்.ஓ., பிளான்ட் திறப்பு
நாமகிரிப்பேட்டை யூனியனில் 2 ஆர்.ஓ., பிளான்ட் திறப்பு
ADDED : செப் 22, 2024 06:38 AM
ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில், 2 ஆர்.ஓ., பிளான்ட்களை அமைச்சர் மதிவேந்தன், நேற்று தொடங்கி வைத்தார்.
எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், ராசிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட மூலப்பள்ளிப்பட்டி மற்றும் திம்மநாயக்கன்பட்டி ஊராட்சிகளில், தலா, 8 லட்சம் ரூபாய் மதிப்பில், 2 ஆர்.ஓ., பிளான்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. அமைச்சர் மதிவேந்தன், ஆர்.ஓ., பிளான்ட்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ராசிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நாமகிரிபேட்டை ஒன்றியம், மூலப்பள்ளிப்பட்டி, ஈஸ்வரமூர்த்திபாளையம், திம்மநாயக்கன்பட்டி, மத்துருட்டு, மங்களபுரம், ஆயில்பட்டி மற்றும் கார்கூடல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் துவக்க விழா, நேற்று நடந்தது.
மூலப்பள்ளிப்பட்டி ஊராட்சியில், 9.16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கு மாதா கோயில் முதல் பசிரிமலை சாலை வரை, 130 மீ., நீளம், 4.5 மீ., அகலத்திற்கு சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்தல்; 9.16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மாதா கோயில் அருகில் சிறுபாலம் அமைக்கும் பணி; ஈஸ்வரமூர்த்திபாளையம் ஊராட்சியில், 10.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காத்தாகவுண்டனுார் ராஜ் வீடு முதல் சின்னதம்பி வீடு வரை, 155 மீ., நீளம், 4 மீ., அகலத்திற்கு சிமென்ட் சாலை அமைக்கும் பணி உள்பட, 5.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, நிர்வாகிகள் மணி, ஜெயவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.