/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.25 கோடியில் புதிய மருத்துவமனை திறப்பு விழா
/
ரூ.25 கோடியில் புதிய மருத்துவமனை திறப்பு விழா
ADDED : நவ 04, 2025 02:16 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக, 25 கோடி ரூபாய் மதிப்பில், நான்கு அடுக்குமாடி கட்டடமாக புதிதாக கட்டப்பட்டுள்ளது. நாளை காலை, 10:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
இதையொட்டி, அரசு மருத்துவமனையில் விழா ஏற்பாடுகளை, திருச்செங்கோடு தொகுதி கொ.ம.தே.க.,-எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மூர்த்தி, நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணி இணை இயக்குனர் ராஜ்மோகன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, எம்.எல்.ஏ., ஈஸ்வரன் கூறுகையில், ''மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக, 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருச்செங்கோடு புதிய அரசு தலைமை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

