/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி கிராண்ட் பிஸினெஸ் எக்ஸ்போ துவக்கம்
/
தி கிராண்ட் பிஸினெஸ் எக்ஸ்போ துவக்கம்
ADDED : ஜன 06, 2024 01:06 PM
நாமக்கல்: நாமக்கல், சேலம் மெயின் ரோட்டில், பொம்மைக்குட்டை மேட்டில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில், 'தி கிராண்ட் பிஸினெஸ் எக்ஸ்போ' என்ற பெயரில் தொழில் கண்காட்சி ஜன., 5, 6, 7 ஆகிய, மூன்று நாட்கள் நடக்கிறது. நேற்று காலை நடந்த துவக்க விழாவில், சென்னை எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனங்களின் தலைவரும், எம்.பி.,யுமான பாரிவேந்தர், கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதில், 131 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. உணவகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகள், பரிசு பொருட்கள் ஆகிய அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், புதிதாக தொழில் தொடங்க, புதிய டீலர்ஷிப், டிஸ்டிரிபியூட்டர்ஸ், ஏஜென்சிகள் தொடங்கி தொழில் நடத்த, இந்தியாவின் முன்னணி நிறுவனங்களை சேர்ந்த தொழில் நிபுணர்கள், பார்வையாளர்களுக்கு ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்கினர். படிப்புக்கேற்ற வேலை பெற, இந்த கண்காட்சியில் வழிகாட்டி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பொருட்கள் ஸ்டால்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இன்று, நாளையம் இந்த கண்காட்சி நடக்கிறது. 'பொதுமக்கள், தொழில் முனைவோர், வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள், இந்த கண்காட்சியில் பங்கேற்று பயன்பெறலாம்' என, அதன் அமைப்பாளர் புரொபசனல் அண்ட் பிஸினெஸ் பாரம் தலைவர் செந்தில் தெரிவித்தார்.