/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு
/
புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு
ADDED : மே 02, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு ஒன்றியம், பட்லுார் ஊராட்சியில் திருச்செங்கோடு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், ரூ.14.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ., ஈஸ்வரன் திறந்து வைத்தார்.
திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், சங்கர், உதவி பொறியாளர் நஸ்ரிதின், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மோகனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மொளசி பகுதியில், 15 வது நிதிக்குழு மானிய நிதி, 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும், துணை சுகாதார நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.