/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் குழந்தை திருமணம் அதிகரிப்பு; சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் வருத்தம்
/
நாமக்கல்லில் குழந்தை திருமணம் அதிகரிப்பு; சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் வருத்தம்
நாமக்கல்லில் குழந்தை திருமணம் அதிகரிப்பு; சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் வருத்தம்
நாமக்கல்லில் குழந்தை திருமணம் அதிகரிப்பு; சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் வருத்தம்
ADDED : ஜன 28, 2025 07:26 AM
நாமக்கல்: ''தொழில், கல்வியில் சிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில், குழந்தை திருமணம் அதிகளவில் நடக்கிறது,'' என, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் வேலுமயில் பேசினார்.
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், 'மனிதநேய வாரவிழா' நாமக்கல்லில் நடந்தது. எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி வேலுமயில் பேசியதாவது: ஜாதி ரீதியாக துன்புறுத்தப்பட்டவர்களுக்கு தான் வன்கொடுமை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஜாதி பார்த்து எந்த நல்ல விஷயமும் நடப்பதில்லை. சாதித்தவர்களுக்கு, அவர்கள் செய்த பணிக்காக மட்டுமே அங்கீகரித்து விருது வழங்கப்படுகிறது. கோவில் திருவிழாவில், இரு சமூகத்தினர் அடித்துக்கொள்கின்றனர். இதில் படிக்கும் சிறுவர்களை வழக்கில் சேர்ப்பதால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எஸ்.டி., பிரிவில், அதிகம் படிக்க வைப்பதில்லை. அவர்களுக்கு, 4 சதவீதம் இடஒதுக்கீடு இருந்தாலும், அவற்றை பயன்படுத்திக்கொள்வதில்லை.
கடந்த, 2023ல் குழந்தை திருமணம் அதிகம் நடந்தது, நாமக்கல் மாவட்டம் தான். குமாரபாளையம், பள்ளிப்பாளையம், கொல்லிமலையில் குழந்தை திருமணம் அதிகம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. தொழில், கல்வியில் சிறந்த மாவட்டமாக நாமக்கல் இருந்தாலும், இங்கு குழந்தை திருமணம் அதிகளவில் நடக்கிறது. தேசியம், மாநிலம் மட்டுமின்றி, மாவட்டம், தாலுகா அளவிலும் இலவச சட்ட உதவி மையம் உள்ளது. வன்கொடுமை பிறப்பு முதல் இறப்பு வரை, சமூக ரீதியான பாகுபாடு பார்க்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
டி.எஸ்.பி., ராஜூ, பழங்குடியின திட்ட அலுவலர் கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசுக் கல்லுாரி தமிழ்துறை பேராசிரியர் கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.