/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையத்தில் நெல் சாகுபடி அதிகரிப்பு
/
பள்ளிப்பாளையத்தில் நெல் சாகுபடி அதிகரிப்பு
ADDED : அக் 21, 2025 01:42 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் நெல் சாகுபடி அதிகரித்துள்ளதால், எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளிக்கிறது.
மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில், பாசனத்திற்கு கடந்த ஜூலை மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் டிச., இறுதி வரை வரும். மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் வரும் தண்ணீரை பயன்படுத்தி, பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் எளையாம்பாளையம், செங்குட்பாளையம், சமயசங்கிலி, களியனுார், எலந்தகுட்டை, மோளகவுண்டம்பாளையம், ஆலாம்பாளையம் பகுதிகளில், 10,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல்சாகுபடியை, இரண்டு மாதங்களுக்கு முன்பே விவசாயிகள் துவங்கினர். தற்போது, நெற்பயிர்கள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளதால், பள்ளிப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் எங்கு பார்த்தாலும் ஒரே பசுமையாக
காட்சியளிக்கிறது.