/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாடுகள் வரத்து அதிகரிப்பு ரூ.2 கோடிக்கு வர்த்தகம்
/
மாடுகள் வரத்து அதிகரிப்பு ரூ.2 கோடிக்கு வர்த்தகம்
ADDED : அக் 09, 2024 01:05 AM
மாடுகள் வரத்து அதிகரிப்பு
ரூ.2 கோடிக்கு வர்த்தகம்
புதுச்சத்திரம், அக். 9-
புதன்சந்தை மாட்டுச்சந்தைக்கு கேரளாவில் இருந்து மாடுகள் வரத்து அதிகரித்ததால், 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. இங்கு சேந்தமங்கலம், வேலகவுண்டம்பட்டி, நவணி, புதுச்சத்திரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வாரந்தோறும் ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதேபோல், மாடுகள் வாங்கிச் செல்ல கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகின்றனர். இந்நிலையில், நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு கேரளாவில் இருந்து அதிகளவில் மாடுகள் விற்பனைக்கு வந்ததால், மாடுகள் விற்பனை அதிகரித்தது. கடந்த வாரம், 1.20 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்த நிலையில், இந்த வாரம், 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.