/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இந்திய அரசியலமைப்பு தினம் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி
/
இந்திய அரசியலமைப்பு தினம் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி
இந்திய அரசியலமைப்பு தினம் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி
இந்திய அரசியலமைப்பு தினம் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி
ADDED : நவ 27, 2024 12:56 AM
இந்திய அரசியலமைப்பு தினம்
கலெக்டர் தலைமையில் உறுதிமொழி
நாமக்கல், நவ. 27-
ஆண்டுதோறும் நவ., 26ல், அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் உமா தலைமையில், இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதேபோல், நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் நாமக்கல் சட்டக்கல்லுாரி இணைந்து, இந்திய அரசியலமைப்பு தின விழாவை கொண்டாடினர். இதில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கடமைகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி, ஓவிய போட்டி நடத்தப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கிரைம் பார் நாமக்கல் அசோசியேஷன் தலைவர் அய்யாவு கலந்துகொண்டார். சட்டக்கல்லுாரி துணை முதல்வர் பிரியா, நேரு யுவகேந்திரா முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் முகமது நிஷார் ஆகியோர், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வங்கினர்.
* நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்., கமிட்டி சார்பில், நாமக்கல் கோட்டை சாயைில் உள்ள காந்தி சிலை முன், நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்., கமிட்டி தலைவர் சித்திக் தலைமையில், நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியினர் அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை வாசித்தனர்.