/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
23 ஆண்டுகளுக்கு பின் இன்ஸ்பெக்டர் நியமனம்
/
23 ஆண்டுகளுக்கு பின் இன்ஸ்பெக்டர் நியமனம்
ADDED : ஆக 23, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு, திருச்செங்கோடு உட்கோட்டத்தில், திருச்செங்கோடு நகரம், திருச்செங்கோடு ஊரகம், எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், மொளசி, பள்ளிப்பாளையம், குமாரபாளையம், வெப்படை, என, எட்டு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில், மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு, எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் தான், கடந்த, 23 ஆண்டுகளாக கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தனர்.
இந்நிலையில், 23 ஆண்டுகளுக்கு பின், மல்லசமுத்தரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு என, ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சுதா, மல்லசமுத்திரம் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.